எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி: இந்திய ராணுவம் தகவல்!

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2019 03:40 pm
pakistan-intensifying-efforts-to-increase-strength-of-terrorists-along-loc-army

ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவப்படைகளால் விரட்டியடிக்கப்பட்டனர். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து (விதி 370 & 35A ) திரும்பப் பெறப்படுவதாக நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். மேலும், ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார். 

மேலும், இது தொடர்பான ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 

அமித் ஷாவின் அறிவிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே 10,000 துணை ராணுவப்படையினர் காஷ்மீரில் குவிக்கப்பட்டனர். அதையடுத்து இரு தினங்களில் மேலும் 28,000 வீரர்கள் குவிக்கப்பட்டனர். மேலும், இரு தினங்களுக்கு முன்பு எல்லையில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானியர்கள் இந்திய படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

தொடர்ந்து காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், இன்று எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவப்படைகளால் விரட்டியடிக்கப்பட்டனர். 

மேலும், பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் தனது படையை அதிகரித்து வலுப்படுத்தி வருவதாகவும் இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய ராணுவத்தினரும் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close