சந்திரயான் -2 வெற்றிகரமாக புவியின் ஐந்தாவது சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்!

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2019 04:56 pm
fifth-earth-bound-orbit-raising-maneuver-for-chandrayaan2-spacecraft-has-been-performed-today

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலம், இன்று புவியின் ஐந்தாவது சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  

நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம்,  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் உதவியுடன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஜூலை 22ம் தேதி பிற்பகல் 2:43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  

சந்திரயான் -2 விண்கலம் புவியின் நான்காவது சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் முறையாக புவியை படம்பிடித்து அனுப்பியது. 

இதைத்தொடர்ந்து இன்று(ஆகஸ்ட் 6) பிற்பகல் 3.04 மணிக்கு புவியின்  ஐந்தாவது மற்றும் கடைசி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

newstm.in

பாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2!

விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் - 2 விண்கலம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close