மேகதாது அணை : மத்திய அரசு அனுமதி மறுப்பு!

  அனிதா   | Last Modified : 07 Aug, 2019 09:28 am
megadadu-dam-central-government-refuses-permission

தமிழகம், கர்நாடகா இடையே சுமூக தீர்வு ஏற்பட்டால் மட்டுமே மேதாது அணை கட்டுவது குறித்து  பரிசீலிக்க முடியும் என மத்திய சுற்றுச்சூழல் குழு தெரிவித்துள்ளது. 

கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேகதாதுவில் அணைகட்டுவது குறித்து ஆய்வு நடத்த அனுமதி கேட்டு கடந்த ஜூலை மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழுவிட்டம் விண்ணப்பம் அளித்தது. 

இதையடுத்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி, கர்நாடகாவின் மேகதாது அணை குறித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டாம் எனவும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான நடவடிக்கையை கர்நாடகா மேற்கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பினார். 

இதனிடையே, கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு வலியுறுத்தினார். 

இந்நிலையில், மேகதாது அணை கட்ட ஆய்வு மேற்கொள்வதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழு அனுமதி மறுத்துள்ளது. மேலும், அணைகட்ட மாற்று இடம் குறித்து பரிசீலிக்காமல் ஒரே இடத்தில் இரு வேறு உயரத்தில் அணைகள் கட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு, தமிழகம் கர்நாடகா இடையே சுமூக தீர்வு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த அனுமதி அளிக்க முடியும் என தெரிவித்துள்ளது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close