சுஷ்மா மறைவு: பிரதமர் கண்ணீர் மல்க அஞ்சலி!

  அனிதா   | Last Modified : 07 Aug, 2019 10:40 am
sushma-s-death-prime-minister-tribute-with-tears

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ், நேற்றிரவு மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

டெல்லியில் உள்ள சுஷ்மாவின் வீட்டில் அவரது உடல் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

இதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கயா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close