சுஷ்மா உடலுக்கு சோனியா, ராகுல் அஞ்சலி!

  அனிதா   | Last Modified : 07 Aug, 2019 11:02 am
sonia-gandhi-pays-tribute-to-sushma-s-body

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ், நேற்றிரவு மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சுஷ்மாவின் உடல் உறவினர்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. சுஷ்மாவின் உடலுக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

மேலும், பாஜ மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோசி உள்ளிட்ட பல தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close