111 இரும்பு ஆணிகளை விழுங்கிய தொழிலாளி: அதிர்ச்சியில் மருத்துவர்கள் 

  கண்மணி   | Last Modified : 07 Aug, 2019 11:48 am
worker-who-swallowed-iron-nails

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த  49 வயது மதிக்கத்தக்க  தொழிலாளி ஒருவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியில் துடித்துள்ளார்.  பின்னர் சிகிச்சைக்காக திருச்சூர் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள்  அழைத்துச் சென்றுள்ளனர். 

அந்த தொழிலாளியை பரிசோதனை செய்த மறுத்தவர்கள் அவரது  வயிற்றில் ஏராளமான ஆணிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.  அந்த ஆணிகளை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவரது வயிற்றில் இருந்து கிட்டத்தட்ட 111 க்கு  ஆணிகள் அகற்றப்பட்டன. அவரின் உறவினர்களிடம் விசாரித்த போது அந்த தொழிலாளிக்கு   சில ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டதும். தான் என்ன செய்கிறோம் என அறியாத அவர் சாலை ஓரங்களில் கிடந்த இரும்பு ஆணிகளை தொடர்ந்து விழுங்கி வந்ததும் தெரியவந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close