சூப்பர் ஹீரோவாக மாறி கல்லூரி மாணவியை காப்பாற்றிய இளைஞர்: நெகிழ்ச்சியான வீடியோ உள்ளே 

  கண்மணி   | Last Modified : 08 Aug, 2019 01:11 pm
the-young-man-who-saved-a-college-student-in-greater-noida

உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்டா பெருநகரில் கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள கட்டிடம் ஒன்றின் மூன்றாவது மாடியில்  தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன்  கைப்பிடி சுவற்றின் மீது ஏறி நின்றுள்ளார்.

இதனை அங்கு சுற்றியிருந்த பலரும் பதற்றத்துடன் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்நிலையில் அந்த கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் சாதுர்யமாக யோசித்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்த வண்ணம் நெருங்கி வந்துள்ளார் .

தன்னை காப்பாற்ற அந்த இளைஞர் முயற்சிப்பதை உணர்ந்த அந்த பெண் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். உடனே மின்னல் வேகத்தில் பாய்ந்து அந்த பெண்ணின் கையை  பிடித்து மேலே இழுக்க துவங்கினார் அந்த இளைஞர்.

பின்னர் அருகில் இருந்த மற்றவர்களும் சேர்ந்து அந்த அப்பெண்ணை மிட்டனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். மிகுந்த பாராட்டை  பெற்று வரும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close