குலாம் நபி ஆசாத்தின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!

  Newstm Desk   | Last Modified : 08 Aug, 2019 01:05 pm
bjp-leaders-condemned-for-ghulam-nabi-azad-s-statments

அஜித் தோவல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

நாடாளுமன்றத்தில் கடந்த 5ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 திரும்பப்பெறப்படுவதாகவும், ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேங்களாக உருவாக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். மேலும், சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்படுவதற்கான தீர்மானத்திற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆய்வுக்காக காஷ்மீர் சென்றார். காஷ்மீரில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் உரையாடினார். காஷ்மீர் நிலவரம் குறித்து அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்தார். மேலும், வீதியில் நின்று அவர்களுடன் உணவருந்தினார். சோபியான் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் உள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். 

அஜித் தோவலின் இந்த ஆய்வுப் பயணம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கொச்சைத்தனமாக விமர்சித்திருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, பாஜக செய்தித் தொடர்பாளர் சையத் ஷா நவாஸ் ஹுசேன் கூறும்போது, "வழக்கமாக இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் தான் எதிர்ப்பு தெரிவிக்கும். அந்த வேலையை தற்போது காங்கிரஸ் செய்வது வேடிக்கையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

மேலும், பாஜக தலைவர்கள் ராம் மாதவ் மற்றும் அமித் மால்வியா ஆகியோரும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close