இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் வெளியிடத் தடை!

  Newstm Desk   | Last Modified : 08 Aug, 2019 03:30 pm
kashmir-issue-pakistan-ban-indian-movies-in-pakistan

காஷ்மீர் விவகாரத்தின் எதிரொலியாக, இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் கடந்த 5ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 திரும்பப்பெறப்படுவதாகவும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். மேலும், சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்படுவதற்கான தீர்மானத்திற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

ஏற்கனவே காஷ்மீரை தன்வசப்படுத்த வேண்டும் என்று நினைத்த பாகிஸ்தான் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை முறித்துக்கொள்வதாகவும்,  பாகிஸ்தான் நாட்டிற்கான இந்திய தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இது தவிர இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ்(Samjhauta Express services) ரயில் சேவையையும் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close