தமிழகம், கேரளா, கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்! - வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2019 11:26 am
imd-weather-report

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், வங்கக்கடலில் 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும் கனமழை தொடரும் என்பதால் கேரள மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

தமிழகத்திலும் நீலகிரி அவலாஞ்சியில் இதுவரை காணாத அளவுக்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close