ஆகஸ்ட் 17 -18ல் பிரதமர் மோடி பூடான் பயணம்!

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2019 01:03 pm
pm-narendra-modi-to-visit-bhutan-from-17-18-august-to-discuss-ways-to-further-strengthen-and-diversify-bilateral-partnership

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக வருகிற ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் பூடான் செல்ல இருக்கிறார். 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஆட்சியமைத்து, சில மாதங்களில் அவர் அண்டை நாடான பூடான் நாட்டிற்குச் சென்றார். 

இதைத்தொடர்ந்து, இந்த முறையும் வருகிற ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக பூடான் நாட்டிற்குச் செல்ல இருக்கிறார். அப்போது, மாங்டெச்சு என்ற இடத்தில் நீர் மின் உற்பத்தி திட்டம் ஒன்றை தொடக்கி வைக்கிறார். இத்திட்டத்திற்காக கடந்த 2010ம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையே திட்டம் ஒப்பந்தம் போடப்பட்டது. 

மேலும், பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமர் லேடாய் ஷெரிங் மற்றும் அந்நாட்டு மன்னர் வாங்க்ஸுக்கை சந்தித்து பேசுகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close