ஜம்முவில் 144 தடை உத்தரவு தளர்வு; நாளை முதல் பள்ளிகள் திறப்பு..

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2019 05:37 pm
section-144-withdrawn-for-jammu-schools-to-reopen-tomorrow

ஜம்மு மற்றும் லடாக் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் கடந்த 5ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 திரும்பப் பெறப்படுவதாகவும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேங்கள் உருவாக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

இதன் காரணமாக, கடந்த சில தினங்களாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் காஷ்மீரில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்று ஜம்மு மற்றும் லடாக் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close