அருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளது: குடியரசு தலைவர் மாளிகை

  அனிதா   | Last Modified : 10 Aug, 2019 09:06 am
arun-jaitley-is-in-good-health-president-house

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சீராக இருப்பதாக குடியரசு தலைவர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 

உடல்நல குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நேற்றைய தினம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நேற்றிரவு மருத்துவமனை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், அருண் ஜெட்லி பலதரப்பட்ட மருத்துவர்கள் மேற்பார்வையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், இதய நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், துணை குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு இன்று அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து விபரம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அருண் ஜெட்லி உடல் நிலை சீராக இருப்பதாக குடியரசு தலைவர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close