கர்நாடகாவில் கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு!

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2019 03:00 pm
chief-minister-b-s-yeddyurappa-has-announced-rs-5-lakh-compensation

கர்நாடகாவில் கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளை இழந்த நிலையில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு குறித்து இன்று ஆய்வு செய்தார். அமைச்சரின் ஆய்வுக்கு பின்னர், கனமழையினால் உயிரிழந்தோருக்கு நிவாரண உதவியை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 24 பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close