காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 11 Aug, 2019 09:59 am
sonia-gandhi-will-be-the-congress-leader

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவரே தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் நேற்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், பல்வேறு மாநிலத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முதலில் இந்நிகழ்ச்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திரும்பிச் சென்றனர். தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்கத் தேவையில்லை என்றும் மண்டல பிரதிநிதிகள் முடிவெடுக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றனர். 

தொடர்ந்து, 5 மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close