தகவல்கள் திருடப்படலாம்! - எச்சரிக்கை விடுக்கும் ஐ.ஆர்.சி.டி.சி

  முத்துமாரி   | Last Modified : 11 Aug, 2019 10:13 am
railways-suggests-these-things-to-all-users

ரயில்களில் வெளியூருக்கு பயணம் செய்யும் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் போது தங்களுக்கான ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை அளிக்க வேண்டும். அதன்பின்னர், பயனர்களின் விபரம் அளிக்கப்பட்ட பின்னர் வங்கிக்கணக்கு அல்லது நெட் பேங்கிங் விபரங்களை கொடுக்க வேண்டும்.

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நடைபெறும் போது தகவல்கள் திருட வாய்ப்புள்ளதால் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று  ஐ.ஆர்.சி.டி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தங்களது ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை யாருடனும் பகிர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் வங்கி விபரங்கள் எளிதில் திருடப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் பயணிகள் சரியான முறையில் நேரடியாக ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், அதேபோன்று உங்களது டிக்கெட்டை கேன்சல் செய்வது, அதற்கான பணத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்ட சேவைகளையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று ஐ.ஆர்.சி.டி.சி தளத்தின் ஊழியர்கள் பேசுகிறோம் என்று யாரேனும் உங்களுக்கு போன் செய்து விபரங்களைக் கேட்டால் அந்த அழைப்புகளை நிராகரிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் குறுந்தகவலும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக, டிக்கெட் பெற்றுத் தருவதாக கூறி சில பணமோசடி சம்பவங்களும் நடைபெறுவதால், அதனை தடுக்க ரயில்வே முயற்சி செய்து வருகிறது.  எனவே பயணிகள் யாரும் டிக்கெட் கட்டணத்திற்கு அதிகமாக பணம் கொடுத்து, அவர்களை நம்பி யாரும் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் ரயில்வே எச்சரித்துள்ளது. 

ஏற்கனவே, சமீபத்தில் பாதுகாப்பு கருதி ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வடிவுடன் இணைய தளம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close