கேரளாவுக்கு முதற்கட்டமாக ரூ.52 கோடி நிவாரண நிதி: மத்திய அரசு அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 13 Aug, 2019 08:38 pm
rs-52-crore-relief-fund-for-kerala-central-government-announces

கேரளாவில் மழை, வெள்ள பாதிப்புகளுக்கு முதற்கட்டமாக ரூ.52 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று, கேரளாவுக்கு நிதியுதவி ஒதுக்கியது தொடர்பாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும், கடந்த முறை கேரளாவுக்கு அளித்த ரூ.3000 கோடி நிதியில் ரூ.1500 கோடி மட்டுமே செலவிட்டுள்ளனர் என்றும், கேரளாவில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும் என்றும் இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close