நிலவின் சுற்றுப்பாதையில்... சந்திராயன் 2...

  அனிதா   | Last Modified : 14 Aug, 2019 10:16 am
chandrayaan-2-is-in-orbit-of-the-moon

சந்திராயன் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்துப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

நிலவு குறித்த ஆராய்ச்சிக்கான சந்திரயான் -1 விண்கல சோதனை வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்வதற்காக சந்திரயான் -2 விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த ஜூலை 22ஆம் தேதி வெற்றிகரமாகவும் விண்ணில் செலுத்தப்பட்டது.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் உதவியுடன் இது  விண்ணில் செலுத்தப்பட்டது. 

இந்நிலையில் பூமியின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்த சந்திராயன் 2, இன்று அங்கிருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு வெற்றிகரமாக செலுத்துப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதையடுத்து நிலவில் தரையிறங்கும் நிலை மீதம் இருப்பதாகவும், திட்டமிட்டப்படி செல்லும் பட்சத்தில் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close