விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது!

  அனிதா   | Last Modified : 14 Aug, 2019 11:11 am
veer-chakra-award-announced-for-wing-commander-abhinandan

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் வீரத்தை போற்றும் வகையில் அவருக்கு மத்திய அரசு வீர் சக்ரா விருது வழங்கப்படவுள்ளது. 

சென்னையை சேர்ந்த அபிநந்தன் இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இந்திய வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

அப்போது, விங் கமாண்டர் அபிநந்தன் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். அந்த தாக்குதலின் போது, பாகிஸ்தான் விமானம் சுட்டத்தில் அபிநந்தன் வந்த விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது. 

இதையடுத்து, பிரதமர் மோடியின் முயற்சியுடன் பாகிஸ்தான் பிடியில் சிக்கிய  அபிநந்தன் பத்திரமாக 60 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். இந்நிலையில், அபிநந்தனின் வீரத்தை போற்றும் வகையில் அவருக்கு மத்திய அரசு வீர் சக்ரா விருது அறிவித்துள்ளது.

அதேபோல், பிப் 27 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலின் போது விமானப்படைக்கு தலைமை வகித்த வீரர் மிண்டி அகர்வாலின் சிறப்பான பணியை போற்றும் வகையில் அவருக்கு யூத் சேவா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாளை நடைபெறும் சுந்திர தினவிழாவில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close