முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார்: பிரதமர் மோடி

  அனிதா   | Last Modified : 15 Aug, 2019 09:09 am
chief-of-defence-staff-will-be-appointed-pm

ராணுவம், விமானப்படை, கடற்படை என்ற முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, " நாட்டின் அமைதியும், பாதுகாப்பும் நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவை என்றும், மனித சமூகத்தின் மீதான தாக்குதலே தீவிரவாதம் எனவும் குறிப்பிட்டார். தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், தீவிரவாதம் மற்றும் அதனை ஆதரிப்பவர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இந்தியாவின் அண்டை நாடுகளும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒரு மிகப்பெரிய யுத்தத்தை நடத்தி வருவதாகவும், பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் அண்டை நாடுகளின் முகத்திரையை கிளித்து வருவதாகவும் கூறினார்.

ஒவ்வொரு இந்தியரின் பெருமையாக நமது படைகள் உள்ளன. நாட்டை பாதுகாப்பதில் பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். விரைவில் ராணுவம், விமானப்படை, கடற்படை என்ற முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். Chief of Defence staff என்ற புதவியில் புதிய அதிகாரி நியமிக்கப்படுவதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு படைகள் ஒருங்கிணைக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close