டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்

  அனிதா   | Last Modified : 15 Aug, 2019 09:26 am
independence-day-speech-in-modi

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

டெல்லியில், தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், " ஒவ்வொரு இந்தியனும் நாட்டின் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.  இந்தியாவை உயர்தர சுற்றுலா மையமாக உருவாக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், வட மாநிலங்களில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தாலும் மக்கள் சுற்றுலா இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சென்றுவர வேண்டும் என வலியுறுத்தினார். 

உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறிய அவர், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும், இந்தியாவின் ரூபே கார்டை உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த முடியும் என்றும் கூறினார். 

ரசாயன உரங்களை பயன்படுத்தி தாய் மண்ணை அழித்து வருவதாகவும், எனவே நமது மண்ணில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாம். மேலும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்றும், மகாத்மா காந்தி பிறந்த நாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பிரதமர் கூறினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close