பிரதமர் மோடிக்கு 20 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தானிய சகோதரி!

  Newstm Desk   | Last Modified : 15 Aug, 2019 09:32 pm
pm-narendra-modi-s-pakistani-rakhi-sister-qamar-mohsin-shaikh-wishes-him-good-health-hails-triple-talaq-law

தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண் ராக்கி கயிறு கட்டி வருகிறார். 

பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்ட கமர் மொஹ்சின் ஷேக் என்பவர் குஜராத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது வசித்து வருகிறார். இவர் கடந்த 24 ஆண்டுகளாக ரக்ஷா பந்தன் அன்று பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து ராக்கி கட்டி வருகிறார்.

இன்றைய தினமும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதையொட்டி, அவர் தனது கணவருடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து சகோதரர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "முதல்முறையாக ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்த போது மோடி அவர்களை சந்தித்தேன். அன்றைய தினம் முதல் இன்று வரை ரக்ஷாபந்தன் அன்று அவரை சந்தித்து வாழ்த்துக் கூறி வருகிறேன். இந்நாளில் எனது மூத்த சகோதரருக்கு ராக்கி கட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close