தொடரும் துப்பாக்கிச்சண்டை; எல்லையில் பதற்றம்

  Newstm Desk   | Last Modified : 17 Aug, 2019 09:07 pm
jammu-kashmir-fight-between-india-pakistan-forces

ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், இந்திய இராணுவத்தினால் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இன்று ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதில் பாகிஸ்தான் தரப்பில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் எல்லையில் பதட்டமும் நிலவி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close