காஷ்மீர் விவகாரம்: எழுத்தாளர் தஸ்லிமா நஸ்-ரீன் சீனாவுக்கு கேள்வி!

  Newstm Desk   | Last Modified : 19 Aug, 2019 11:54 am
kashmir-issue-writer-taslima-nasreen-questions-china

தன்னுடைய நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்ட முடியாத சீனா காஷ்மீரில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளதாக எழுத்தாளர் தஸ்லிமா நஸ்-ரீன் கூறியுள்ளார். 

வங்கதேசத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்-ரீன். இவர் எழுதிய லஜ்ஜா என்ற நாவல்  உலக அளவில் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்தது. இந்த நாவல் தங்கள் மதத்துக்கு விரோதமாக உள்ளதாகக் கூறி,  இஸ்லாமிய தீவிரவாதிகள் தஸ்லிமாவின் தலைக்கு ஃப்ட்வா விதித்தனர். இதையடுத்து அவர் அகதியாக இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் அவ்வப்போது இந்தியாவில் நிலவும் அரசியல், சமுதாயப் பிரச்னைகள் மற்றும் பாகிஸ்தானின் அரசியல் குறித்தும் கருத்துகள் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் சீனா தலையிடுவது தொடர்பாக தஸ்லிமா நஷ்ரீன் ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில், காஷ்மீரில் உள்ள 1000 பேர்  நடத்தும் போராட்டத்தைக் குறிப்பிட்டு அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என ஆதரவு தெரிவிக்கும் சீனா, ஹாங் ஹாங்கில் லட்சக்கணக்கானோர் உரிமை கோரி ஜனநாயக முறையில் போராடிவரும் நிலையில், இதுகுறி்த்து உலக நாடுகள் மத்தியில் சீனா அமைதி காத்து வருவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close