அபாய நீர்மட்டத்தை தாண்டி ஓடும் யமுனை ஆறு: மக்கள் அச்சம்!

  அனிதா   | Last Modified : 20 Aug, 2019 12:13 pm
water-level-of-yamuna-river-rises-to-205-94-meters

யமுனை ஆற்றில் வெள்ளம் அபாய நீர்மட்டத்தையும் தாண்டி ஓடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  

வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றான யமுனை ஆறு இமயமலையில் உற்பத்தியாகிறது. டெல்லி, ஹரியானா மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த ஆறு உத்தரப்பிரதேசம் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. இந்நிலையில் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

தற்போது, அபாய நீர் மட்டமான 205.33 அடியை தாண்டி 205.94 அடியை எட்டியுள்ளது.  இதனால் யமுனை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close