நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது சந்திராயன்-2

  அனிதா   | Last Modified : 20 Aug, 2019 10:09 am
chandrayaan-2-entered-the-moon-s-orbit

புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திராயான் 2 நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக சுற்றத் தொடங்கியுள்ளது. 

நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக  கடந்த ஜூலை  22 ஆம் தேதி சந்திராயன் 2 விண்ணில் அனுப்பப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் உதவியுடன் இது  விண்ணில் செலுத்தப்பட்டது. 

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திராயன் 2 இன்று திரவ என்ஜினை இயக்கி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.  இதை தொடர்ந்து செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஆக.21, 28, 30, செப்.1 ஆகிய நாட்களில் சந்திராயன் 2 விண்கலத்தின் திசை 4 முறை மாற்றப்பட்டு. செப்.2 ஆம் தேதி சந்திராயன் 2 ல் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் சுற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை 2 முறை மாற்றப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, செப் 7ஆம் தேதி நிலவில் மெதுவாக தரையிறக்கப்பட்டு ஆய்வு தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close