மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2019 08:19 pm
chhota-rajan-gets-8-year-jail-term-in-murder-bid-case

ஹோட்டல் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டுதல் மற்றும் கொலை முயற்சி செய்த வழக்கில் பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீது பணம் கேட்டு மிரட்டல், போதை மருந்து கடத்தல், கொலை, கொள்ளை என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்தோனேஷியாவிற்கு தப்பி ஓடிய சோட்டா ராஜன் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார். 

இவர் கடந்த 2012ஆம் ஆண்டு பிரபல ஹோட்டல் உரிமையாளர் பி.ஆர்.ஷெட்டி என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவரை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் முடிவில்,சோட்டா ராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேருக்கு தலா 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் தலா ரூ. 5 லட்சம் அபராதம்  விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close