சிதம்பரம் மனு மீது இன்று விசாரணை இல்லை: மீண்டும் நீதிபதி மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2019 02:50 pm
chidambaram-plea-not-to-be-heard-today

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இம்மனு தொடர்பாக காலையில் முறையிட்டபோது தலைமை நீதிபதியை நாடுமாறு நீதிபதி ரமணா கூறியிருந்தார். ஆனால், தலைமை நீதிபதி அமர்வு அயோத்தியா வழக்கை விசாரித்து வருவதால் மீண்டும் ரமணாவை நாடியது. 

இதையடுத்து, இம்மனுவை அவசரமாக விசாரிக்க மீண்டும் மறுப்பு தெரிவித்த நீதிபதி ரமணா, சிதம்பரம் மனு பட்டியலிடப்படும் வரை விசாரிக்க இயலாது. இம்மனு மீது இன்று விசாரணை இல்லை என்றார். எவ்வித இடைக்கால நிவரணமும் வழங்கவும் நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, அயோத்தி தொடர்பான வழக்கு முடிவடைந்த பிறகு,  தலைமை நீதிபதியிடம் 4 மணிக்கு சிதம்பரம் தரப்பில் மீண்டும் முறையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close