ஜம்மு - காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியது

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2019 05:35 pm
normal-life-resumes-in-j-k

ஜம்மு - காஷ்மீரில் பெரும்பாலான கல்வி நிலையங்கள், கடைகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டு வழக்கம் போல் இயங்கி வருகின்றன. இதனால், அங்கு இயல்பு வாழ்கை மீண்டும் திரும்பியுள்ளது. 

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரம் திரும்ப ஏற்கப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை வெடிக்காமல் இருக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், மெல்ல மெல்ல அங்கு தொலைபேசி மற்றும் இணையதள இணைப்புகள் வழங்கப்பட்டன. மேலும் இன்று முதல் 90 சதவீதத்திற்கும் மேலான கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டதால் அங்கு இயல்பு வாழ்கை திரும்பியுள்ளது. 

ஜம்முவில் மதரஸாக்கள் திறக்கப்பட்டன. காஷ்மீரிலும் நிலைமை சீரடைந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close