கனமழையால் வடமாநிலங்கள் பாதிப்பு!

  அனிதா   | Last Modified : 22 Aug, 2019 09:40 am
north-states-are-affected-by-heavy-rains

பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பஞ்சாப், உத்தரகாண்ட், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் யமுனை, சட்லஜ் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றில் வினாடிக்கு 8.28 லட்சம் கன அடி தண்ணீர் செல்வதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பஞ்சாப் சட்லஜ் நதியிலும் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இமாச்சல பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளன. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close