அரசு முறை பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார் பிரமர் மோடி!

  அனிதா   | Last Modified : 22 Aug, 2019 02:53 pm
prime-minister-modi-leaves-for-france

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டார்.

இந்தியா -பிரான்ஸ் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் புறப்பட்டார். இன்று மாலை பாரீஸ் சென்றடையும் பிரதமர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசுகிறார். 

தொடர்ந்து நாளை காலை பிரான்ஸ் பிரதமரை சந்தித்து பேசும் பிரதமர் மோடி பின்னர் பாரீசில் வசித்து வரும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். மேலும், ஏர் இந்தியா விமான விபத்துக்களில் உயிரிழந்த இந்தியர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னம் ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 

பின்னர் அங்கிருந்து அமீரகத்துக்கு  புறப்படும் பிரதமர் மோடி, வரும் 24 ஆம் தேதி பக்ரைன் செல்கிறார். அதை தொடர்ந்து மீண்டும் பிரான்ஸ் செல்லும் பிரதமர், பியாரிட்ஸ் நகரில் வரும் 25, 26ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார். 

newstm.in
 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close