நாளை காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி!

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2019 09:35 pm
rahul-gandhi-visits-kashmir

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை காஷ்மீருக்கு செல்ல இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அப்போது ராகுல் காஷ்மீருக்கு வந்து இங்கு உள்ள நிலைமையை பார்வையிட தயார் என்றால் அவருக்கு ஹெலிகாப்டர் அனுப்பத் தயார் என்று காஷ்மீர் ஆளுநர் தெரிவித்திருந்தார். இதையடுத்து காஷ்மீருக்குத் தான் வந்து ஆய்வு செய்யத் தயார் என்று கூறினார்.

அதன்படி நாளை அவர் காஷ்மீருக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரும் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close