ஸ்ரீநகர் புறப்பட்ட அனைத்துக் கட்சி குழுவினர்!

  அனிதா   | Last Modified : 24 Aug, 2019 11:53 am
rahul-gandhi-onboard-flight-to-srinagar

டெல்லியில் இருந்து விமானம் மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் புறப்பட்டனர். 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதையொட்டி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் இன்று காஷ்மீர் சென்று மக்களை சந்திக்க இருப்பதாக அறிவித்திருந்தனர். இதனிடையே அரசியல் கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு வரவேண்டாம் என காஷ்மீர் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

மேலும், ஸ்ரீநகர் விமானநிலையத்தில் துணை ராணுவப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,  ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் புறப்பட்டனர். குலாம்நபி ஆசாத், திருச்சி சிவா, ஆனந்த் சர்மா, சீதாராம் யெச்சூரி ஆகியோரும் காஷ்மீர் செல்கின்றனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close