பஹ்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை பெற்றது எனது அதிர்ஷ்டம்: மோடி பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2019 11:48 am
pm-modis-speech-to-indian-community-in-bahrain

பஹ்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற முறையில் அதனை தனது அதிர்ஷ்டமாக கருதுவதாக அந்நாட்டில் உள்ள இந்திய வம்சா வழியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் சென்ற மற்றும் அபுதாபிக்குச் சென்ற அவர் இன்று பஹ்ரைன் நாட்டிற்குச் சென்றார்.

அங்கு பஹ்ரைன் இளவரசர் கலீபா பின் சல்மான் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவு, வர்த்தகம் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் மூலம் பக்ரைன் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

பஹ்ரைன் இளவரசரின் விருந்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தற்போது அங்குள்ள இந்திய வம்சா வழியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, " ஒரு இந்திய பிரதமர் பஹ்ரைனுக்கு வருகை தர நீண்ட நேரம் ஆனது என்பதை நான் உணர்கிறேன். இருப்பினும், பஹ்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற முறையில் அது எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன். 

இன்று இந்துக்களின் புனித பண்டிகைகளுள் ஒன்றான ஜென்மாஷ்டமி  கொண்டாடப்படுகிறது. உங்களுக்கும், உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் 'கிருஷ்ணா ஜன்மோத்சவ்' வாழ்த்துக்கள். 

நான் நாளை ஸ்ரீநாத்ஜி கோவிலுக்குச் சென்று இந்த நாட்டில் அமைதி மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்வேன். இந்தக் கோவிலின் புனரமைப்பு நாளை தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close