தமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் அதிகாரி தற்கொலை!

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2019 11:02 pm
crpf-officer-commits-suicide-in-kashmir

தமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் துணை கமாண்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

தமிழகத்தில் கோவையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் படையில் துணை கமாண்டராக பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் சென்று வந்த நிலையில் கடந்த 14ம் தேதி மீண்டும் பணியில் இணைந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் தொடர்பாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close