மருமகன் அத்துமீறலால் அத்தையை நிர்வாணமாக்கி மொட்டை அடித்த பஞ்சாயத்து

  Newstm Desk   | Last Modified : 26 Aug, 2019 01:55 pm
women-tonsured-and-stripped-out-alleged-illictic-relationship-with-nepew

மருமகனுடன் கள்ள உறவு வைத்திருந்தததாக சந்தேகப்பட்ட கிராம பஞ்சாயத்தார், அந்த நபரின் அத்தையை நிர்வாணமாக்கி அவருக்கு மொட்டை அடித்து கொடூர தண்டனையை நிறைவேற்றினர். இது தொடர்பாக 11 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர். 

ஜார்கண்ட் மாநிலம் , கோடெர்மா மாவத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண், 22 வயதான தன் மருமகன் தன்னிடம் அடித்து மீறலில் ஈடுபடுவதாகவும், கடந்த மூன்று மாதங்களாக தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். 

இதற்கு மறுநாளே அந்த பெண்ணின் அக்கம் பக்கத்துக்கு வீட்டார், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து வந்து, அந்த பெண்ணை இழுத்து அவரின் உடைகளை களைந்து, அவரின் தலையை மொட்டை அடித்தனர். சொந்த மகன் போல் கருத வேண்டிய மருமகனுடன் தகாத உறவு வைத்திரிருந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். 

இந்த சம்பவம் போலீசாருக்கு தெரியவே, அவர்கள் விசாரணைக்கு வந்த போது பஞ்சாயத்தில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றனர். 11 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close