சந்திராயன்-2 எடுத்த 2வது புகைப்படம் வெளியீடு!

  அனிதா   | Last Modified : 27 Aug, 2019 08:47 am
lunar-surface-imaged-by-terrain-mapping-camera-2-tmc-2-of-chandrayaan2

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் எடுத்த நிலவின் 2வது புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 

நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 2  விண்கலத்தை  அனுப்பியது. கடந்த 22ஆம் தேதி சந்திராயன் 2 எடுத்த நிலவின் படத்தை இஸ்ரோ வெளியிட்டது. இந்நிலையில், நேற்று 2வது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. 

நிலவிலிருந்து 4, 375 கி.மீ., தொலைவில் உள்ள மேற்பரப்பை படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதில் பல பள்ளங்கள் காணப்படுகின்றன. செயற்கைகோள்கள் செயலிழந்து நிலவின் மீது விழும்போது அதன் பாதிப்பு காரணமாக இந்த பள்ளங்கள் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close