ரூ,1 'சானிட்டரி நாப்கின்': மத்திய அரசின் அதிரடி திட்டம்

  அனிதா   | Last Modified : 27 Aug, 2019 03:39 pm
sanitary-napkin-for-one-rupee

பெண்கள் நலனிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, " பெண்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சில திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். 

குறிப்பாக, ஜன் அவுஷாதி திட்டத்தின் கீழ் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள மலிவு விலை மருந்தகங்களில் தற்போது, ஒரு சானிட்டரி நாப்கின், ரூ,2.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் (4 நாப்கின் அடங்கிய பாக்கெட் ரூ.10), இனி இது ரூ.1க்கு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த மக்களவை தேர்தலின் போது, பா.ஜ.க, அளித்த வாக்குறுதிகள் அனைத்தும், ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், அவற்றில், இதுவும் அடங்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close