இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 26 பேர் கைது!

  அனிதா   | Last Modified : 27 Aug, 2019 04:00 pm
26-person-arrested-for-attempting-to-infiltrate-india

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற 26 பேரை எல்லை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர். 

இந்தியா - வங்கதேச எல்லையான கோனா பகுதி வழியாக வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள்  ஊடுருவ முயன்றுள்ளனர். இதனை கண்ட எல்லை பாதுகாப்புப்படையினர் அவர்களை சுற்று வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இந்தியா வருவதற்கான அனுமதி எதுவும் இல்லை என்பதால் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மேற்கு வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close