குஜராத்தில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2019 08:17 pm
five-including-4-of-a-family-drown-in-gujarat-river-5-others-rescued

குஜராத் மாநிலத்தில் ஆற்றில் மூழ்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில், நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

குஜராத் மாநிலம் பவநகர் என்ற மாவட்டத்தில் உள்ள ஜூனா ரதன்பூர் என்ற கிராமத்தில் 'கேரி' ஆற்றில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் 10 பேர் இன்று மதிய உணவை முடித்துவிட்டு ஆற்றில் குளிக்கச்சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு நபர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட, அவரைக் காப்பாற்றும் நோக்கில் மற்றவர்களும் சென்றுள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக 10 பேரும் ஆழமான நீர்ச்சுழலில் சிக்கிக் கொண்டனர்.

இதை பார்த்த அந்தக் கிராம மக்கள் உடனடியாக அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மீட்புப் படைகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த 10 பேரில் 5 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். எஞ்சிய ஐந்து பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close