ஏ.டி.எம்., பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள்?

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2019 10:26 pm
govt-plans-to-control-atm-fraud

வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம்., கார்டுகளை தவறாக பயன்படுத்தி, அதன் மூலம், பண மோசடி நடைபெறுவதை தடுக்க வங்கிகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக, ஒரு முறை ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்திய பின், 6 - 12 மணி நேரம் கழித்தே மறுமுறை பயன்படுத்தும் வகையில் மற்றம் செய்யப்படுவது குறித்து, சமீபத்தில் நடைபெற்ற 18 வங்கிகளின் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அதே போல், ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தும்போது, வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணுக்கு ஓடிபி எனப்படும் ஒரே முறை பயன்படுத்தத்தக்க ரகசிய எண் அனுப்பவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

இந்த மாற்றங்கள் விரைவில் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close