பள்ளிகளை ஒருங்கிணைக்கும் இணையதளம்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார்!

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2019 09:41 pm
union-hrd-minister-ramesh-pokhriyal-launches-integrated-online-junction-for-school-education-shagun

நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் பள்ளிகளை இணையதளத்தின் வாயிலாக இணைக்கும் பொருட்டு 'ஷாகுன்' என்ற இணையதளத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியல் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், "கல்வி என்பது நாட்டின் அடிப்படை விஷயங்களில் ஒன்று. நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி மிகவும் அவசியம். அதற்கான ஒரு அடித்தளத்தை நாம் இந்தியாவில் உருவாக்கியுள்ளோம். கல்வித்துறையில் மேன்மேலும் நாம் வளர்ச்சி பெற வேண்டும். இந்த இணையதளம் இதற்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 

இந்த இணையதளத்தின் வாயிலாக இரண்டு லட்சம் கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்படும். மேலும், இந்த கல்வி நிறுவனங்கள் குறித்த விவரங்களும் அதில் இடம்பெறும். கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிவையும் இதில் இணைக்கப்படுகிறது" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close