நிலவை நெருங்கும் சந்திராயன் 2

  அனிதா   | Last Modified : 30 Aug, 2019 07:24 pm
chandrayaan-2-successfully-maneuvered-fourth-lunar-bound-orbit

சந்திராயன் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பதை 4வது முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து  சந்திராயன் 2 விண்கலத்தை, ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.  பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். 

அதன்படி, புவியின் வட்டப்பாதையில் 5 முறை அதன் பாதை மாற்றியமைக்கப்பட்டு, நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு வெற்றிகரமாக கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து இன்று நிலவின் சுற்றுவட்டப்பதையில் 4 வது முறையாக சந்திராயன் 2 விண்கலத்தின் பாதை வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன் 2 வரும் செப்.7ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close