பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: வங்கி ஊழியர்கள் நாளை நாடு தழுவிய போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2019 09:21 pm
bankers-strike-against-bank-merging

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பல்வேறு பொதுத்துறை வங்கிகள் இணையப் போவதாக கூறினார்.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார். 

வங்கிகள் முன்பாக வங்கி ஊழியர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், இதன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை மாலை முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close