கோவாவில் படகு தீப்பிடித்து எரிந்தது! லட்சக்கணக்கில் சேதம்..

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2019 10:30 pm
goa-houseboat-gutted-after-fire-breaks-out-damage-worth-lakhs-caused

கோவா தலைநகர் பனாஜி அருகே சப்போரா ஆற்றில் நின்று கொண்டிருந்த படகு ஒன்று இன்று காலை திடீரென தீப்பிடித்தது. ஆனால், படகில்  இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை 11 மணியளவில் படகு சீரமைப்புப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென படகு தீப்பிடித்தது. சிலர் தப்பிக்க முயற்சி செய்தனர். கரையில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவே, அவர்கள் வந்து தொழிலாளர்களை மீட்டதால், அனைவருமே காப்பாற்றப்பட்டனர். அதே நேரத்தில் படகின் பெரும்பாலான பகுதி சேதமடைந்தது. இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close