பாகிஸ்தான் பிரதமருக்கு கோரிக்கை வைக்கும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்!

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2019 11:14 pm
amarinder-singh-tweets-imran-khan-on-sikh-teen-s-alleged-abduction-in-pak

சீக்கியர் பெண் ஒருவர் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் நான்கணா சாஹிப் என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவர் சீக்கிய மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக புகார்கள் எழும்பியுள்ளன. 

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், பாகிஸ்தான் பிரதமரின் இம்ரான் கானுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சீக்கிய பெண் கட்டாய மத மாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டது தனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும்,  வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

— Capt.Amarinder Singh (@capt_amarinder) August 30, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close