திருமணத்திற்கு மறுத்த விபச்சாரியை கொலை செய்த நபர் கைது!

  Newstm Desk   | Last Modified : 31 Aug, 2019 07:02 pm
man-killed-a-prostitute-who-declined-a-proposal-for-marriage

டெல்லியை சேர்ந்த பாலியல் தொழிலை ஒருவரை திருமணம் செய்ய விரும்பிய 32 வயது நபர் ஒருவர், அந்த பெண்ணிடம் சில நாட்களாக பழகி வந்துள்ளார். தனக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதை மறைத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்ணை காதலிப்பதாக அவரிடம் கூறினார். 

சில நாட்களில் அந்த பெண்ணுக்கு, இவரின் குடும்பம் பற்றிய உண்மை தெரிய வரவே, அவர் திருமணத்திற்கு மறுத்து விட்டார். இந்நிலையில், பாலியல் தொழிலை விட்டுவிடும்படியும், தன்னை திருமணம் செய்யும்படியும் தொடர்ந்து கட்டாயப்படுத்திய அந்த நபரை, அப்பெண் புறக்கணித்துவிட்டார். 

இதனால் கடும் கோபமுற்ற அந்த நபர், பாலியல் தொழிலாளியான அந்த பெண்ணை கொலை செய்தார். அப்பெண் மர்ம முறையில் இறந்து கிடந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், 32 வயதான அந்த நபரை கைது செய்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close