அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை நிறுவப்படும்: முதல்வர் நிதிஷ் குமார்

  Newstm Desk   | Last Modified : 31 Aug, 2019 08:38 pm
arun-jaitley-s-statue-to-be-installed-in-bihar-nitish-kumar

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை நிறுவப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான அருண்ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 24ஆம் தேதி) எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். தொடர்ந்து, அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பல்வேறு கட்சியை சார்ந்த அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். 

இந்நிலையில், அருண் ஜெட்லியை கவுரவிக்கும் வகையில் டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண்ஜெட்லி பெயர் சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, மற்றொரு அறிவிப்பாக, அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை நிறுவப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், அருண் ஜெட்லியின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close