ஸ்ரீநகரில் ஆய்வு செய்கிறார் ராணுவத் தலைமைத் தளபதி!

  Newstm Desk   | Last Modified : 31 Aug, 2019 08:54 pm
army-chief-bipin-rawat-reviews-operational-preparedness-along-loc

இந்திய ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இன்று ஸ்ரீநகரில் ராணுவ நிலைகளை ஆய்வு செய்து வருகிறார். 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் ராணுவச் சிப்பாய்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத், இன்று காஷ்மீர் சென்றுள்ளார். இந்திய எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை ஆய்வு செய்தார். ராணுவ வீரர்களுடன் வடக்கு பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close