யு.பி.எஸ்.சி தேர்வுக்கு படிக்கும் கணவர்; விவாகரத்து கேட்கும் மனைவி

  Newstm Desk   | Last Modified : 31 Aug, 2019 09:59 pm
wife-seeks-divorce-from-husband-because-he-s-always-busy-studying-for-upsc-never-has-time-for-her

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் அவர் கூறிய காரணமும் சற்று அதிர்ச்சி அடைய வைப்பதாகவே இருக்கிறது.

இதுகுறித்து அவர் குடும்ப நல நீதிமன்றத்தில் அளித்த மனுவில், 'எனது கணவர் சிபிஎஸ்சி அரசு பணித் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இதனால் அவர் நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருக்கிறார். என்னுடன் செலவழிக்க எந்த நேரத்தையும் அவர் ஒதுக்கவில்லை' என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், "வெளியில் கடைக்கு செல்லவேண்டும் என்றாலோ, திரைப்படத்திற்கு செல்ல வேண்டும் என்றாலோ அவர் என்னை கூட்டிச் செல்வதில்லை. அதேபோன்று, அவரது உறவினர்கள் வீட்டிற்கு கூட செல்வதில்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே எனக்கு அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும்" என்று அவர் அளித்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையடுத்து, கணவன்-மனைவி இருவரையும் அழைத்து குடும்ப நல நீதிமன்றம் கவுன்சிலிங் செய்து வருகிறது. இதுகுறித்து பெண்ணின் கணவர் கூறும்போது, 'யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. அந்த கனவை அடையும்வரை நான் தொடர்ந்து முயற்சிப்பேன் எனது மனைவி மீது எனக்கு எந்த கோபமும் வருத்தமும் கிடையாது எனக்கு எனது கனவு நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அதற்காக அதிக நேரம் செலவிடுகிறேன்' என்று விளக்கம் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close